விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. நேற்று (மே.15) இந்தப் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியிருந்தது.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் கடந்த 2022-இல் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஷ்ணு விஷாலே தயாரித்த இந்தப் படத்தை சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கியிருந்தார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
கட்டா குஸ்தி - 2 திரைப்படம் வருகிற ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணியில் உருவான இரண்டு வானம் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல் தனது எக்ஸ் பக்கத்தில், “சண்டை போடாத ஜோடியே இல்லைன்னு சொல்லுவாங்க. இவங்க சண்டை மட்டுமே போடுற ஜோடி” எனக் குறிப்பிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
Summary
A couple that does nothing but fight... The second poster for the film Katta Kushti 2!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









