தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

News image

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள். - சித்திரிப்பு / விஜய்

Updated On :14 மே 2026, 7:05 pm IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1மிஸ்டர் எக்ஸ்

Listicle image

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கெளதம் கார்த்திக், அனகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

2காளிதாஸ் - 2

Listicle image

நடிகர் பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் - 2 திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவான காளிதாஸ் - 2 படத்தில் கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக பரத் நடிக்க, முக்கிய பாத்திரங்களில் அஜய் கார்த்திக், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

3துரந்தர் - 2

Listicle image

ஆதித்யா தார் இயக்கத்தில் பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19ஆம் தேதி துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

4’ஒரு துரோக சாஹச்சர்யத்தில்

Listicle image

ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் எழுதி இயக்கிய, மலையாள மொழிப்படம் ’ஒரு துரோக சாஹச்சர்யத்தில்’. இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன், திலீஷ் போத்தன், சஜின் கோபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காமெடி, திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

5எக்ஸாம்

Listicle image

சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள இணையத் தொடர் எக்ஸாம். இந்தத் தொடரில் அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நாளை(மே 15) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

6கடந்த வார ஓடிடி (எல்ஐகே)

Listicle image

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே.

இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

7வாழ - 2

Listicle image

இயக்குநர் விபின் தாஸ் எழுத்தில் சவின் எஸ். ஏ இயக்கத்தில் வாழ - 2 திரைப்படம், கடந்த ஏப். 2-ல் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.

8பரதநாட்டியம் 2: மோகினியாட்டம்

Listicle image

கிருஷ்ணதாஸ் முரளி இயக்கத்தில் சைஜு குருப், சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெகதீஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படம் பரதநாட்டியம் 2: மோகினியாட்டம்.

நகைச்சுவை - திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

9ஓ பட்டர்ஃபிளை

Listicle image

விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உளவியல் திரில்லர் படமாக வெளியான திரைப்படம் ஓ பட்டர்ஃபிளை.

நிவேதிதா சதீஷ், சிபி புவனா சந்திரன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

10சாத்தான்: தி டார்க்

Listicle image

ஐரா, சாந்தினி தமிழரசன், எஃப் ஜே உள்ளிட்டோர் நடிப்பில் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சாத்தான்: தி டார்க்.

அஸ்தினாபுரம் என்ற மலைக்கிராமத்தில் சாத்தான் வழிபாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை, அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

11டகாய்ட்: எ லவ் ஸ்டோரி

Listicle image

அதிவி சேஷ், மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான அதிரடி பாணியில் எடுக்கப்பட்டுள்ள தெலுங்கு மொழிப்படம் டகாய்ட் : எ லவ் ஸ்டோரி.

இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

Summary

Let's take a look at which movies are releasing on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.