நடிகர் விக்ரமின் 63 ஆவது திரைப்படத்தில் நடிகை ரியா ஷிபு இணைந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளியான “இருமுகன்” பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 63 ஆவது படம் உருவாகி வருகின்றது.
பிரபல தயாரிப்பாளர்களான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார்.
இந்த நிலையில், சர்வம் மாயா படத்தின் மூலம் மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகின் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த நடிகை ரியா ஷிபு இப்படத்தில் இணைந்துள்ளதாக, படக்குழு இன்று (மே 13) அறிவித்துள்ளது.
முன்னதாக, நடிகர்கள் நிவின் பாலி மற்றும் ரியா ஷிபு நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான “சர்வம் மாயா” படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary
Actress Riya Shibu has joined Actor Vikram's 63rd film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









