’கருப்பு’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அதுபற்றி பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’கருப்பு’.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியே இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
முன்னதாக, படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
கருப்பு திரைப்படம் மே 14 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.
விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கை இல்லாததால், தவெகவுடன் கூட்டணி கட்சிகள் இணைவது தொடர்பான செய்திகள் தமிழக சூழலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. மேலும், பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டால் விஜய் அடுத்த வாரம் ஆட்சியமைத்து முதல்வராகப் பதவியேற்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கருப்பு திரைப்பட வெளியீடு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி, எக்ஸ் தளத்தில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட்ட பதிவில், “சொன்ன தேதியில சொன்ன சொல்படி கருப்பன் வருவான்! பட்டாசு எடுத்து வைங்க பண்டிகை வரப்போகுது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கருப்பு திரைப்படம் மே 14 அன்று வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Summary
Will the movie Karuppu be released? An update from RJ Balaji!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








