முதல்வன் திரைப்படத்தை நிராகரித்த விஜய் இன்று முதல்வராகவுள்ளார்.
தமிழ் சினிமாவின் சிறந்த அரசியல் எழுச்சிப்படங்களில் ஒன்றான முதல்வன் 1999 ஆம் ஆண்டு வெளியானது. பிரம்மாண்டத்திற்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர் நடிகர் அர்ஜுன் கூட்டணியில் உருவான இதில், சாதாரண பத்திரிகையாளர் ஒருநாள் முதல்வராக மாநிலத்தை ஆளும்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளும் தீர்வுகளுமாக இதன் கதை எழுதப்பட்டிருந்தது.
இடையே, காதல் காட்சிகளும் உண்டு என்றாலும் முழுமையாகப் பார்த்தால் ஊழல்வாதிகளுக்கு எதிரான குரலாகவே இருக்கும்.
இப்படத்தின் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு முதலில் தவெக தலைவர் விஜய்க்குதான் சென்றிருக்கிறது. ஆனால், இயக்குநர் ஷங்கர் நேரடியாக விஜய்யின் கதைத் தேர்வுகளைக் கவனிக்கும் எஸ். ஏ. சந்திரசேகரிடம் பேசாமல் துணை இயக்குநரை வைத்து பேச வைத்திருக்கிறார். அவர்கள் இருவரும் பேசியதில் முரண்பாடுகள் ஏற்பட்டதால் இப்படத்தை விஜய் நிராகரித்தாராம்.
அன்று விஜய் வளர்ந்துகொண்டிருந்த காலமென்பதால் அரசியல் படத்தில் நடிப்பது அவருக்கு எதிராக மாறலாம் என எஸ்ஏசி முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்று, அதன் தலைவர் விஜய் முதல்வராகவும் உள்ளார். அன்று ரீல் முதல்வனை நிராகரித்தவர் இன்று நிஜ முதல்வராகவுள்ளது அவரது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
tvk Vijay, who rejected the film Mudhalvan, will become the Chief Minister today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் விஜய் சாலைவலம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?
தவெக தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது!

தவெக தேர்தல் பிரசாரப் பாடல் இன்று மாலை வெளியீடு!
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


