தவெக தலைவர் விஜய் தேர்தலில் வென்றுள்ளதை கேரள ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வந்துள்ளதால் அவர் ஆட்சியமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் ஆதரவுக்கட்சிகளால் முதல்வராக விஜய் ஆட்சியமைப்பார் என்றே தெரிகிறது.
பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இவர் நடிப்பில் இறுதியாக உருவான ஜன நாயகன் பல பிரச்னைகளைச் சந்தித்து இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமல் இருக்கிறது. தற்போது, தேர்தலில் வென்றுள்ளதால் அடுத்த சில நாள்களிலேயே இப்படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், கேரளத்தில் பல பகுதிகளில் விஜய்யின் வெற்றியை அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக கொல்லத்தில், ஊர்வலமாகச் சென்று ’முதல்வர் விஜய்’ கோஷத்தையும் எழுப்பியுள்ளனர். இதற்கான புகைப்படங்கள், விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Kerala fans have celebrated the victory of Tvk leader Vijay in the elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?

தவெக தலைவர் விஜய் அவசர ஆலோசனை!
தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு

வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்!
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

