பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

தள்ளிப்போகும் மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு?

தள்ளிச்செல்லும் விஜய் சேதுபதியின் புதிய படம்...

News image

விஜய் சேதுபதி, மணிரத்னம்

Updated On :3 மே 2026, 6:01 pm IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவியை வைத்து புதிய திரைப்படமொன்றை இயக்குகிறார். இப்படம் சென்னையைப் பின்னணியாக வைத்து உருவாகலாம் எனத் தெரிகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இதன் படப்பிடிப்பை ஜூலை மாதத்திற்கு மணிரத்னம் ஒத்திவைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் புரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். சாய் பல்லவி ராமாயணா படத்தில் நடித்து வருகிறார்.

Information has been released about the shooting of a new film directed by director Mani Ratnam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.