இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் கைவிடப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இப்படத்திற்கு முன்பே இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். அதற்கான, சந்திப்புகள் நடைபெற்றதுடன் படப்பிடிப்பு குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தையிலேயே இருக்கிறது.
மேலும், சிவகார்த்திகேயனுக்கு வெங்கட் பிரபு சொன்ன கதையில் திருப்தி இல்லாததால்தான் சேயோனில் இணைந்தார் என கூறப்பட்டது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு உடனான திரைப்படத்திலிருந்து சிவகார்த்திகேயன் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இப்படம் கைவிடப்படலாம் என்றே தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹரி இயக்கத்தில் அதர்வா?
அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தும் ஹெச். வினோத்!

மணிரத்னம் திரைப்படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் என்ன ஆனது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



