மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மணிரத்னம் திரைப்படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்?

மணிரத்னம் இயக்கும் புதிய திரைப்படம் குறித்து...

News image

மணிரத்னம், சாய் அபயங்கர், விஜய் சேதுபதி

Updated On :18 மார்ச் 2026, 7:11 am

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவியை வைத்து புதிய திரைப்படமொன்றை இயக்குகிறார். இப்படம் சென்னையைப் பின்னணியாக வைத்து உருவாகலாம் எனத் தெரிகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கரை மணிரத்னம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஜா திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடன் மட்டுமே பயணித்து வந்த மணிரத்னம் முதல்முறையாக புதிய தலைமுறை இசையமைப்பாளரை அணுகியுள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

reports suggests music director sai abhyankkar on board to maniratnam new movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.