ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
1சப்தம்

நடிகர் ஆதி, லட்சுமி மேனன், சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சப்தம். ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் சப்தம் எனும் புதிய படத்தை இயக்கியிருந்தார்.
ஓராண்டு கழித்து தற்போது ஜீ5 ஓடிடியில் சப்தம் வெளியாகியுள்ளது.
2முத்து என்கிற காட்டான்
இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள “முத்து என்கிற காட்டான்” இணையத் தொடரில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்த இணையத் தொடர் நாளை (மார்ச் 27) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
3மாயபிம்பம்

கே. ஜே. சுரேந்தர் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் மாயபிம்பம். இந்தப் படத்தில் ஆகாஷ் நடராஜன், ஜானகி சீனிவாசன், ஹரி ருத்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
4மஸ்திஷ்கா மரணம்

ரஜிஷா விஜயன் நடித்த நகைச்சுவை கலந்த திரில்லர் திரைப்படம் மஸ்திஷ்கா மரணம்.
மலையாள மொழிப்படமான மஸ்திஷ்கா மரணம் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
5வலது வஸதே கள்ளன்

ஜோஜு ஜோர்ஜ் மற்றும் பிஜு மேனன் நடித்த மலையாள மொழிப்படமான வலது வஸதே கள்ளன் திரைப்படத்தை மனோரமா மேக்ஸ், சிம்பிளி செளத் ஓடிடியில் பார்க்கலாம்.
ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இப்படம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
6கடந்த வார ஓடிடி (மை லார்ட்)
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான திரைப்படம் ‘மை லார்ட்.
கடந்த பிப். 13 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற மை லார்ட் திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
7சீதா பயணம்

அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தில் அர்ஜுன், துருவ சார்ஜா, ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், பிரகாஷ் ராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
8போர்த் ஃப்ளோர்

ஆரியின் போர்த் ஃப்ளோர் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
நாயகனாக ஆரி அர்ஜுனன் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்தியா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
9வளவாரா

கன்னட மொழிப்படமான வளவாரா படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
காணாமல் போன பசுவைத் தேடி கண்டுபிடிக்கும் சிறுவர்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
10காசர்கோட் எம்பஸி

மலையாள மொழியில் எடுக்கப்பட்டுள்ள காசர்கோட் எம்பஸி இணையத் தொடரை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
இந்தத் தொடரில் அபு சலீம், கபீர் துஹான் சிங் மற்றும் தீபக் பரம்போல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆதிஷ் எம். நாயர் இயக்கியுள்ளார்.
11லேன்ட்லார்ட்

கன்னட மொழியில் வெளியான அதிரடித் திரைப்படமான லேன்ட்லார்ட் திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது.
முதலாளித்துவத்தால் பாதிக்கப்படும் குடும்பங்கள் குறித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
Summary
You can see which movies and web series are releasing this week on OTT platforms.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!

ஓடிடியில் தாய் கிழவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



