ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
1தாய் கிழவி

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் பிரதான பாத்திரத்தில் நடித்த தாய் கிழவி திரைப்படம் கடந்த பிப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தத் திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை(ஏப். 10) முதல் பார்க்கலாம்.
2காக்கி சர்க்கஸ்

காவல் நிலையத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள புதிய இணையத் தொடர் காக்கி சர்க்கஸ். இந்த இணையத் தொடரில் நடிகர்கள் முனீஸ்காந்த் - சுபாஷ் செல்வம் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காக்கி சர்க்கஸ் இணையத் தொடர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
3கனிமங்கலம் கோவிலகம்

ராஜேஷ் மோகன் இயக்கத்தில் அஜ்மல் கான், அபி கிரிஷ், முகமது ரஃபி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மலையாள மொழித் திரைப்படம் கனிமங்கலம் கோவிலகம்.
இந்தப் படம் திகில் சம்பவங்களை வைத்து நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டுள்ளது. கனிமங்கலம் கோவிலகம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை வெளியாகவுள்ளது.
4நாங்கள்

இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நாங்கள். மூன்று குழந்தைகளின் வாழ்க்கையையும், அவர்களுக்கும் தந்தைக்குமான உறவை மையப்படுத்தியும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
5ஹால்

வீரா இயக்கத்தில் ஷேன் நிகம், சாக்ஷி வைத்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஹால். இந்தப் படம் நகைச்சுவை, காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
ஹால் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி நாளை முதல் பார்க்கலாம்.
6கடந்த வார ஓடிடி (வடம்)

வடம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தில் விமலுடன் நட்டி நட்ராஜன், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’ நரேன், ஷரவண சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
7சித்தாரே ஜமின் பர்

நடிகர் ஆமிர் கானின் சித்தாரே ஜமின் பர் படத்தை சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.
ஆமிர் கான் புரடக்ஷன் தயாரிப்பில் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் உருவான இந்தப் படம், கடந்தாண்டு ஜூன் 20ஆம் தேதி யூடியூபில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
8மிருத்யுஞ்சய்

ஸ்ரீ ஹுசைன் ஷா கிரண் இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படம் மிருத்யுஞ்சய்.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் காணக் கிடைக்கிறது.
9வெள்ளப்பம்

பிரவீன் ராஜ் பூக்காடன் இயக்கத்தில், அக்ஷய் ராதாகிருஷ்ணன் மற்றும் நூரின் ஷெரீப் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம் வெள்ளப்பம்.
காதல் மற்றும் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தை, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
10லவ் பாலிசி

நகைச்சுவை மற்றும் காதல் கலந்து தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் லவ் பாலிசி.
இந்தத் திரைப்படத்தை ஈடிவி வின் ஓடிடி தளத்தில் காணலாம்.
Summary
You can see which movies and web series are releasing this week on OTT platforms.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

சப்தம் முதல் முத்து என்கிற காட்டான் வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


