ஆடு - 3 திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபலமான திரைப்படம் ஆடு. இயக்குநர் மிது மானுவல் தாமஸ் இயக்கத்தில் நடிகர் ஜெயசூர்யா நடிப்பில் கடந்த 2015 வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
கயிறு இழுக்கும் போட்டியில் வெற்றி பெற்ற சாஜி பப்பன் (ஜெயசூர்யா) அணிக்கு ஆடு ஒன்று வழங்கப்படுகிறது. இந்த ஆட்டை கொல்ல முடிவு செய்யும்போது நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை. சுவாரஸ்யமான நகைச்சுவை படமாக உருவான இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், ஆடு - 3 திரைப்படம் கடந்த மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
டிரைலர் கவனம் ஈர்த்திருந்தாலும் யாரும் எதிர்பாராத அளவிற்கு முதல் நாளிலிருந்தே மிகப்பெரிய அளவில் டிக்கெட் விற்பனை நடைபெற்றது. இதனால், முதல் 4 நாள்களில் இப்படம் ரூ. 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியுள்ளது.
மோகன்லால், மம்மூட்டி திரைப்படங்கள் மட்டுமே செய்து வந்த முதல் வார வசூலை ஜெயசூர்யா முதல்முறையாக செய்துள்ளார். மேலும், இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடியைக் கடக்கலாம் என்பதால் இப்பாகம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்தடுத்து ரூ. 100 கோடி! அசத்தும் மலையாளத் திரைத்துறை!

ரூ. 70 கோடி வசூலித்த யூத்!
பிரியதர்ஷனின் 100-வது திரைப்படம்... புதிய உலக சாதனை!

அடுத்தடுத்து தமிழில் ஹிட் கொடுத்த நடிகை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


