இயக்குநர் பிரியதர்ஷன் தன் 100-வது திரைப்படத்தை இயக்கவுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் 42 ஆண்டுகளாக இயக்குநராக இருப்பவர் பிரியதர்ஷன். 1984-ல் பூச்சாக்கொரு மூக்குத்தி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தற்போது வரை 99 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சுவாரஸ்யமாக, தன் முதல் திரைப்படத்தின் நாயகனாக மோகன்லால் நடித்தார். தொடர்ந்து, மோகன்லாலை வைத்து மின்னரம், தென்மாவின் கொம்பத், காலாபாணி, ஒப்பம் போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்தார்.
தமிழில் நடிகர் பிரகாஷ் ராஜை வைத்து இவர் இயக்கிய காஞ்சிவரம் திரைப்படத்திற்காக சிறந்த படம், சிறந்த தயாரிப்பாளர் பிரிவில் தேசிய விருது அசத்தினார்.
இந்திய சினிமாவிற்கு அதிகமான பங்களிப்பைச் செய்த இயக்குநர்களில் ஒருவரான பிரியதர்ஷனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
இந்த நிலையில், தற்போது பிரியதர்ஷன் தன் 100-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக மோகன்லால் நடிக்கிறார்.
தன் முதல் படத்தின் நாயகனையே தன் 100-வது திரைப்படத்திலும் இயக்கவுள்ள இயக்குநர் என்கிற புதிய உலக சாதனையையும் இதன் மூலம் பிரியதர்ஷன் நிகழ்த்தவுள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
director priyadarshan' 100th movie starring by mohanlal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்தடுத்து ரூ. 100 கோடி! அசத்தும் மலையாளத் திரைத்துறை!

வசூலில் பட்டையைக் கிளப்பும் ஆடு - 3!

அடுத்தடுத்து தமிழில் ஹிட் கொடுத்த நடிகை!

ரூ. 1300 கோடி வசூலிலும் ஒரு நேர்காணல் கூட கொடுக்காத இயக்குநர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


