மலையாளத்தின் வெளியான திரைப்படங்கள் அடுத்தடுத்து ரூ. 100 கோடியை வசூலித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய சினிமாவிலேயே தரமான திரைப்படங்களை எடுக்கும் திரைத்துறை மலையாளம்தான் என பெயர் இருக்கிறது. அப்பெயரைக் காப்பாற்ற மற்ற மொழி சினிமாக்கள் தங்களை நெருங்காத வண்ணம் மலையாள சினிமா கதையாகவும் உருவாக்க ரீதியாகவும் வளர்ச்சிப்பாதையிலேயே இருக்கிறது.
முக்கியமாக, சில ஆண்டுகளுக்கு முன் வணிக ரீதியாகவும் முன்னேற்றம் கண்ட மலையாள சினிமா இன்று சாதாரணமாக ரூ. 100 கோடியைக் கடக்கும் ஆற்றலுடனே உள்ளது.
ஆண்டிற்கு ஒரு நூறு கோடி திரைப்படத்தைக் கொடுத்துக்கொண்டிருந்த மலையாள சினிமா, இப்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அப்படியான படத்துடன் வருகிறது.
கடந்தாண்டு டிச.25 ஆம் தேதி வெளியான நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தொடர்ந்து, இந்தாண்டில் மார்ச் மாதம் வெளியான ஆடு - 3 திரைப்படம் 5 நாள்களிலேயே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
தற்போது, ஏப். 2 ஆம் தேதி வெளியான வாழ - 2 திரைப்படமும் ஒருவாரத்திலேயே ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதிரடியாக வசூலைக் குவித்துள்ளதைக் கவனித்தால் இனி மலையாள சினிமாக்களும் மற்ற மொழியை ஒப்பிடக்கூடிய வணிக போட்டியில் இருக்கும் என்பதையே சுட்டுகிறது.
இந்தாண்டு இதுவரை வெளியான எந்தத் தமிழ்ப்படமும் ரூ. 100 கோடி வசூலிக்கவில்லை. மிக நல்ல படம் என பாராட்டுகளைப் பெற்ற தாய்கிழவி ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
surprising that Malayalam films have collected Rs. 100 crores in a row.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலியல் குற்றச்சாட்டு! இயக்குநர் ரஞ்சித் ஜாமீனில் விடுவிப்பு!

வசூலில் பட்டையைக் கிளப்பும் ஆடு - 3!

அடுத்தடுத்து தமிழில் ஹிட் கொடுத்த நடிகை!

ரூ. 1300 கோடி வசூலிலும் ஒரு நேர்காணல் கூட கொடுக்காத இயக்குநர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



