நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்த 8 திரைப்படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதி இந்தியளவில் கவனிக்கக்கூடிய நடிகராக உள்ளவர். விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தவர் ஜவானில் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாது பிக் பாஸ், இணையத் தொடர்கள் உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இறுதியாக, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 100 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, வசனம் இல்லாத காந்தி டாக்கிஸ் படத்திலும் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின், மணிகண்டன் இயக்கிய காட்டான், புரி ஜெகன்நாத் இயக்கத்தில் பெக்கர் மற்றும் ஜெயிலர் - 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதுபோக, இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல், பாலாஜி தரணிதரனின் புதிய படம், வெற்றி மாறனின் அரசன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள புதிய திரைப்படமொன்றில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
கதாநாயகன் ஆன பின் தனக்கென சில வழிகளை வைத்துக்கொள்ளாமல் அனைத்து விதமான திரைப்படங்களில் கலந்து நடித்து வருவதும் மூத்த, இளைய இயக்குநர்களின் விருப்ப நாயகனாக இருப்பதும் என விஜய் சேதுபதி திரைத்துறையினருக்கே பெரிய கொடுத்து வருகிறார்.
Summary
actor vijay sethupathi waits for his upcoming eight movies
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புரி ஜெகன்னாத்தை வாழ்த்திய விஜய் சேதுபதி!

சமையல் சிலிண்டருக்காக மக்களைக் காக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின்
அரசனில் காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி?

மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


