மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் லெஜண்ட் சரவணன்!

லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படம் குறித்து...

News image

லெஜண்ட் சரவணன்

Updated On :18 மார்ச் 2026, 10:05 am

நடிகர் லெஜண்ட் சரவணன் அடுத்ததாக 3 வேடங்களில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லெஜண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், அடுத்ததாக கதையம்சமுள்ள இயக்குநருடன் பணியாற்ற வேண்டும் என பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார்.

தற்போது, எதிர்நீச்சல், கருடன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமாருடன் இணைந்துள்ளார். லீடர் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில், அடுத்ததாக 3 வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் இதுவரையில் தமிழ் சினிமாவில் இப்படியான கதாபாத்திரங்களில் யாரும் நடித்திருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்தின் முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இயக்குநர் யார் என்பது குறித்து எந்தத் தகவலும் பகிரப்படவில்லை.

Summary

actor legend saravanan shares his next movie update

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.