மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

300-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகும் லீடர்!

லீடர் திரைகள் குறித்து...

News image

லெஜண்ட் சரவணன் - poster

Updated On :2 ஏப்ரல் 2026, 9:40 am

லெஜண்ட் சரவணன் நடித்த லீடர் திரைப்படம் 300-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளது.

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவான லீடர் திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் யூடியூபிலேயே 2 கோடி பார்வைகளைக் கடந்தது. மேலும், லெஜண்ட் சரவணனின் நடிப்பும் உடல்மொழியும் ஆச்சரியப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படம் ஏப். 3 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆச்சரியமாக, டீசருக்கு கிடைத்த வரவேற்பால் நிறைய திரையரங்கங்கள் இப்படத்தை வெளியிடுகின்றன. முக்கியமாக, தமிழகத்திலேயே லீடர் 300க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகவுள்ளது.

லெஜண்ட் திரைப்படத்தை ஒப்பிட கூடுதல் திரைகளில் லீடர் வெளியாகியுள்ளது. ஒருவேளை படம் நன்றாக இருந்தால் வசூலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.

Summary

legend movie will release more than 300 theatre screens

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.