நடிகர் மம்மூட்டின் இளமையான தோற்றத்திற்கான காரணம் இதுதான் என சமூக வலைதளங்களில் சில விஷயங்கள் வைரலாகியுள்ளன.
மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 74 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் 74 வயது இளைஞன் என்றே செல்லமாக அழைத்தும் வருகின்றனர்.
இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான களம்காவல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் எதிர்மறை கதாபாத்திரமாக மம்மூட்டியின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
தற்போது, கலித் ரஹ்மான் இயக்கத்தில் மட்டஞ்சேரி மாஃபியா மற்றும் தனுஷ் - 55 படத்தில் நடித்து வருகிறார்.
74 வயதிலும் மம்மூட்டி முகச்சுருக்கங்கள், நடை மாற்றம், வயதான தோற்றம் என எதுவும் இல்லாமல் 50 வயதில் உள்ளவரைப் போன்றே இருக்கிறார் என பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

மம்மூட்டி
இந்த நிலையில், மம்மூட்டியின் இளம் தோற்றத்தின் ரகசியத்திற்கான காரணம், “எண்ணை குறைவான அசைவ உணவுகளை மட்டுமே உண்பது, இரவு 7 மணிக்குள் இரவுணவை எடுத்துக்கொள்வது, அன்றாடம் உடற்பயிற்சி, ஆழ்ந்த வாசிப்பு, நல்ல தூக்கம் உள்ளிட்டவற்றை மிகக் கறாராக கடைப்பிடிப்பதுதான்” என பதிவொன்று வைரலாகியுள்ளது.
மம்மூட்டியின் கறாரான இந்த வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டுமென பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
Summary
viral post about actor mammootty follows his health secrets
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தள்ளிப்போகும் மோகன் லால் - மம்மூட்டியின் பேட்ரியாட் வெளியீடு!
இணையத்தில் வைரலாகும் வாரணாசி செட்!
கண்கள் அடிக்கடி துடிப்பதற்கு இதுதான் காரணம்!

ஜெயலலிதாவின் புகழ் பாடும் மோடி! இதுதான் காரணம்! - விளக்கிய முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


