மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தெலுங்கிலும் வரவேற்பைப் பெறும் யூத்!

யூத் திரைப்படத்தின் தெலுங்கு வசூல் குறித்து...

News image

யூத் போஸ்டர் - youth production

Updated On :2 ஏப்ரல் 2026, 7:14 am

நடிகர் கென் நடிப்பில் உருவான யூத் திரைப்படம் தெலுங்கிலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.

நடிகர் கென் இயக்கி, நடித்த யூத் திரைப்படம் அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பள்ளி மாணவனின் சேட்டைகளும் மனம் மாற்றங்களுமான உருவான இப்படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்ததுடன் இதுவரை ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர், நாயகன் என அறிமுகமான திரைப்படத்திலேயே கென் சிறப்பான வசூலை ஈட்டியிருப்பது திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அண்மையில் தெலுங்கிலும் இப்படம் வெளியானது. அங்கும் இளம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இப்படம் இதுவரை ரூ. 4 கோடி வசூலித்துள்ளது.

தமிழிலிருந்து டப்பிங் செய்யப்பட்டு வெளியானாலும் ஆரோக்கியமான வசூலையே தெலுங்கிலும் செய்திருப்பது கவனிக்க வைத்துள்ளது.

Summary

youth movie collected rs. 4 crs in telugu release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.