மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக இவர்தான்!

எதிர்நீச்சல் -2 தொடரில் நடிகை கனிகாவுக்கு பதிலாக ஈஸ்வரி பாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகை குறித்து...

News image

கனிகா / தேவையானி - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :17 மார்ச் 2026, 10:31 am

எதிர்நீச்சல் -2 தொடரில் நடிகை கனிகாவுக்கு பதிலாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடரான எதிர்நீச்சல் -2, மற்ற தொடர்களைக் காட்டிலும் முன்னணி இடத்தைப் பிடித்து வருகிறது. வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானாலும் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்டுள்ளது.

இத்தொடரில் நடிகை பார்வதி, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இத்தொடரில் ஈஸ்வரி என்ற முதன்மை பாத்திரத்தில் நடித்துவந்த நடிகை கனிகா, எதிர்நீச்சல் -2 தொடரில் இருந்து விலகியுள்ளார். முதல் பாகத்தில் இருந்தே நடித்துவந்த இவர் தற்போது விலகியதால், ஈஸ்வரி தொடர்பான காட்சிகள் சமீபகாலமாக இடம்பெறவில்லை.

இந்நிலையில், எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக நடிகை ஸ்ரீஜா நடிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

கனிகா , ஸ்ரீஜா

கனிகா , ஸ்ரீஜா - இன்ஸ்டாகிராம்

பொம்மலாட்டம் தொடரில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை ஸ்ரீஜா. இதுமட்டுமின்றி கல்யாணப் பரிசு, வீடு உள்ளிட்டத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் வேல ராமமூர்த்தி நடிக்கும் ஆதி குணசேகரனின் மனைவியாக, ஈஸ்வரி பாத்திரத்தில் இனி ஸ்ரீஜா நடிக்கவுள்ளார் எனத் தெரிகிறது.

பலரும் இந்த பாத்திரத்தில் நடிகை தேவையானியை நடிக்க பரிந்துரை செய்து வருகின்றனர். இயக்குநர் திருச்செல்வத்தின் கோலங்கள் தொடரில் நடிகை தேவையானி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Devaiyani or Sreeja new actress will replace Kanika in the series Ethirneechal -2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.