எதிர்நீச்சல் - 2 தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீஜா நடிக்கவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு செல்லும் மருமகள்கள், புகுந்த வீட்டில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இந்தத் தொடரில் பார்வதி, கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, வேல ராமமூர்த்தி, விபு ராமன் உள்ளிட்டோர் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.
எதிர்நீச்சல் தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது படிப்படியாக அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்று வருகிறது.
கதையின் படி, ஆதி குணசேகரனால் தாக்கப்படும் ஈஸ்வரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார்.
ஈஸ்வரி பாத்திரத்தில் நடித்து வந்த கனிகா, தன்னுடைய மகனின் படிப்புக்காக இந்தத் தொடரிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், எதிர்நீச்சல் - 2 தொடரில் ஈஸ்வரி பாத்திரத்தில் பொம்மலாட்டம் தொடர் நடிகை ஸ்ரீஜா நடிக்கவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈஸ்வரி பாத்திரத்தில் ஸ்ரீஜா நடிக்கவுள்ளது தொடரில் பல திருப்பங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கதையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
பொம்மலாட்டம் தொடரில் நடிகை ஸ்ரீஜா பயணம் மிக நீண்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொடரில் ஸ்ரீஜா நடித்திருந்தார். மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு, விதி உள்ளிட்ட தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
Summary
Informed sources report that actress Sreeja will play the role of Easwari in the series edhirneechal - 2.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1200 நாள்களைக் கடந்த எதிர்நீச்சல் தொடர்!

எதிர்நீச்சல் - 2 தொடரில் மாற்றம்! அறிமுகமாகும் புதிய வில்லன்!

எதிர்நீச்சல் - 2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக ஸ்ரீஜா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக இவர்தான்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



