பழம்பெரும் தமிழ் நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். பற்றி அவதூறாகப் பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்துக்கு அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனம் வலுக்கிறது.
தெலுங்குத் திரையுலதில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய குணச்சித்திர நடிகரான ராஜேந்திர பிரசாத் மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகரான காந்தாராவ் பற்றி புகழ்ந்து பேசினார்.
தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் - கோப்புப் படம்
தெலுங்கு சினிமாவில் காந்தாராவின் பங்களிப்பு பற்றிப் பேசிய ராஜேந்திர பிரசாத், அவர் திரையில் கத்திச்சண்டை போடுவதில் வல்லவர் என்றும், அவரைப் பார்த்தால் தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர். கூட பயப்படுவார் என்று மேலும் சில கருத்துக்களை அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ராஜேந்திர பிரசாத் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ரசிகர்களும் தமிழ்த் திரையுலகினரும் அவர் பேசியதற்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் நடிகருமான நாசர் கண்டனம் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார். மேலும், நடிகர் சங்கம் சார்பில் ராஜேந்திர பிரசாத் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றுப் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எம்.ஜி.ஆர். பற்றி அவதூறாகப் பேசிய ராஜேந்திர பிரசாத் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Summary
Strong condemnation arise for a telugu actor who made defamatory remarks about MGR
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹாய் நான்னா இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தெலுங்கிலும் வரவேற்பைப் பெறும் யூத்!

எம்ஜிஆர் பற்றிய அவதூறு: மன்னிப்புக் கேட்ட ராஜேந்திர பிரசாத்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


