மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எம்ஜிஆர் பற்றிய அவதூறு: மன்னிப்புக் கேட்ட ராஜேந்திர பிரசாத்!

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்புக் கேட்டு விடியோ வெளியிட்டது பற்றி...

News image

எம்ஜிஆர் / ராஜேந்திர பிரசாத் - கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 11:07 am

பழம்பெரும் தமிழ் நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். பற்றி அவதூறாகப் பேசியதற்கு தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்புக் கேட்டு விடியோ வெளியிட்டுள்ளார்.

தெலுங்குத் திரையுலதில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய குணச்சித்திர நடிகரான ராஜேந்திர பிரசாத் மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகரான காந்தாராவ் பற்றி புகழ்ந்து பேசினார்.

தெலுங்கு சினிமாவில் காந்தாராவின் பங்களிப்பு பற்றிப் பேசிய ராஜேந்திர பிரசாத், அவர் திரையில் கத்திச்சண்டை போடுவதில் வல்லவர் என்றும், அவரைப் பார்த்தால் தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர். கூட பயப்படுவார் என்று மேலும் சில கருத்துக்களை அவர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ராஜேந்திர பிரசாத் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ரசிகர்களும் தமிழ்த் திரையுலகினரும் அவர் பேசியதற்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டு ராஜேந்திர பிரசாத் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இரண்டு நாள்களுக்கு முன் தெலுங்குத் திரையுலகில் நடந்த விழா ஒன்றில் பழைய நடிகர் காந்தாராவ் பெயரில் எனக்கு விருது வழங்கினர். அந்த விழாவில், தமிழ் சினிமாவின் கடவுள் போன்ற எம்ஜிஆர் சார் பற்றி விளையாட்டாக தவறான வார்த்தைகளை பேசிவிட்டேன். அதை வேண்டுமென்றே பெரிதுபடுத்திவிட்டனர்.

அவரைப் பற்றி தவறாக நான் பேசுமளவிற்கு எனக்குத் தைரியம் இல்லை. நான் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்-ல் படிக்கும்போது எம்ஜிஆர்தான் முதல்வர். அவரைத் தவறாகச் சொல்லும் எண்ணம் எனக்கில்லை. நான் வாய்தவறிப் பேசியதில் யாரேனும் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். என் வாழ்க்கையில் நான் இனி எப்போதும் அதுபோன்று பேசமாட்டேன். என் தவறை இந்த முறை மன்னித்துக் கொள்ளுங்கள். இத்துடன் இதனை விட்டுவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Rajendra Prasad apologizes for defamation of MGR

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.