மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டென்று மாறுது வானிலை பாடல் வெளியீடு!

ஜெய் நடித்துள்ள சட்டென்று மாறுது வானிலை படத்தின் பாடல் வெளியீடு.

News image

சட்டென்று மாறுது வானிலை படத்தின் பாடல் காட்சி

Updated On :11 மார்ச் 2026, 12:40 pm

நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள சட்டென்று மாறுது வானிலை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் தயாரித்து இயக்கும் புதிய படம் சட்டென்று மாறுது வானிலை.

இந்தப் படத்தில் நாயகனாக ஜெய், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு, கருடா ராம், ஸ்ரீமன் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல் கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். சில நாள்களுக்கு முன்பு இசையமைப்பாளர் தேவா பாடிய முதல் பாடலான ‘அக்கடி’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது.

சட்டென்று மாறுது வானிலை என்ற இந்தப் பாடலை பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ளார்.

இந்தப் படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ளது.

Summary

The second single of the film Sattenru Maaruthu Vaanilai starring Jai released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.