மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கணவரைப் பிரிந்தார் ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா விவாகரத்து பற்றி...

News image

நடிகை ஹன்சிகா மோத்வானி - சோஹல் கதூரியா தம்பதி - கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 3:18 pm

நடிகை ஹன்சிகா மோத்வானி - சோஹல் கதூரியா தம்பதிக்கு மும்பை பாண்ட்ரா குடும்பநல நீதிமன்றம் இன்று விவாகரத்து வழங்கியுள்ளது.

தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேலாயுதம், பிரியாணி, சிங்கம் 2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமான ஹன்சிகா, சில ஆண்டுகளாக பெரிதளவில் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இவர் கடந்த 2022 டிசம்பரில் தொழிலதிபர் சோஹல் கதூரியா என்பவரை மணம் முடித்தார். தொடர்ந்து, மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருவரும் குடியேறினர். இதற்கிடையே, ஹன்சிகாவும் அவரது அம்மாவும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக கடந்தாண்டு ஹன்சிகாவின் நாத்தனார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, ஹன்சிகா சில மாதங்களாக கணவரைப் பிரிந்து தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஹன்சிகாவும் அவரது கணவர் சோஹல் கதூரியாவும் பிரிவதாக முடிவெடுத்த நிலையில் இன்று மும்பை பாண்ட்ரா குடும்பநல நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. மேலும், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டாம் என ஹன்சிகா தரப்பு கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Mumbai's Bandra Family Court granted divorce to Hansika Motwani and Sohal Khaduria

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.