மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மீடியாவை சந்திக்கும் சங்கீதா?

செய்தியாளர்களைச் சங்கீதா சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

News image

விஜய் - த்ரிஷா, விஜய் - சங்கீதா

Updated On :9 மார்ச் 2026, 12:36 pm

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். லண்டனைச் சேர்ந்தவரான சங்கீதா திருமணத்திற்குப் பின் விஜய்யுடன் சென்னையிலேயே வசித்து வந்தார். இந்த இணைக்கு மகனும் மகளும் உள்ளனர்.

26 ஆண்டுகளாகத் திருமண வாழ்வில் இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனை உறுதி செய்யும் விதமாக சங்கீதாவின் விவாகரத்து மனு வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மனுவில், நடிகை ஒருவருடன் விஜய் சில ஆண்டுகளாகத் தொடர்பில் இருப்பதாகவும் அதனைக் கண்டித்தும் அவர் கேட்கவில்லை எனக் கூறியிருந்தார்.

தொடர்ந்து, நடிகரும் தவெக தலைவருமான விஜய் கடந்த சில நாள்களுக்கு முன் திருமண நிகழ்வொன்றில் நடிகை த்ரிஷாவுடன் கலந்துகொண்டு பலருக்கும் அதிர்ச்சியளித்தார்.

இது ரசிகர்களிடமும் கட்சியினரிடமும் அதிர்வைக் கிளப்பியது. முக்கியமாக, விஜய்யின் செயலால் சங்கீதா கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், தேர்தலுக்கு முன் சங்கீதா செய்தியாளர்களை நேரில் சந்தித்து தனக்கும் விஜய்க்கும் இடையேயான விஷயங்களைப் பொதுவெளியில் பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

reports suggests actor vijay's wife sangeetha might addressing the media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.