மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சின்ன திரையில் களமிறங்கிய நடிகை அம்பிகா!

நடிகை அம்பிகா மீண்டும் சின்ன திரையில் நடிக்கவுள்ளது குறித்து...

News image

சிந்து பைரவி தொடரில் நடிகை அம்பிகா - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :10 மார்ச் 2026, 9:59 am

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுடன் நடித்த நடிகை அம்பிகா, சின்ன திரையில் மீண்டும் களமிறங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொடரான சிந்து பைரவியில் முக்கிய பாத்திரத்தில் அம்பிகா நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் 80-களில் பல வெற்றிப் படங்களில் நடித்து குடும்ப ரசிகர்களைப் பெற்றவர் நடிகை அம்பிகா. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அம்பிகா நடித்துள்ளார்.

தொடக்கத்தில் கவர்ச்சி நாயகியாக இருந்த இவர், பின்னர் குடும்பப் படங்களில் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் இருந்து விலகாமல், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் அருவி, நாயகி உள்ளிட்ட சில தொடர்களில் முக்கிய பாத்திரத்தில் அம்பிகா நடித்திருந்தார். தற்போது சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் அம்பிகா நடிக்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு சிந்து பைரவி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில், திரவியம், பவித்ரா, ஆர்த்தி சுபாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நடிகை பவித்ரா சிந்து என்ற பாத்திரத்திலும் நடிகர் திரவியம், சிவா என்ற பாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

பவித்ரா, திரவியம்

பவித்ரா, திரவியம் - படம் - இன்ஸ்டாகிராம்

இந்தத் தொடரின் தற்போதைய கதைக்களத்தின்படி, சிந்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக சிவா நீதிமன்றத்தை நாடி விவாகரத்து கேட்டுள்ளார். சிந்துவிடம் இருந்து சிவாவுக்கு விவாகரத்து வேண்டும் என வழக்குரைஞர் வாதாட, நடிகை அம்பிகா சிந்துவுக்கு ஆதரவாக வாதாடுவதைப்போன்று சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். சிந்து பைரவி தொடரில் வழக்குரைஞராகவே அம்பிகா நடிக்கிறார்.

அம்பிகாவின் வருகையால் சிந்து பைரவி தொடரில் பல முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்ன திரைக்கு நடிக்க வந்துள்ளதால், ரசிகர்கள் பலர் வாழ்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Summary

Actress Ambika makes her act in Vijay TVs Sindhu Bairavi serial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.