பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற மீனவப் பெண் சுபிக்ஷா, நடிகர் விஜய் குமாரின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
உறியடி, உறியடி -2 திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த விஜய் குமார், ஃபைட் கிளப், எலக்சன் போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத்ய சிவா இயக்கும் அறிவு திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். டி. இமான் இசையமைக்கும் இப்படத்தை மூவிட்ரோன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
மகளிர் நாளையொட்டி இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் சூர்யா - ஜோதிகா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் போஸ்டரில், பிக் பாஸ் புகழ் சுபிக்ஷா இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் இப்படத்தில் சுபிக்ஷாவும் முக்கிய பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

சுபிக்ஷா - இன்ஸ்டாகிராம்
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை சுபிக்ஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இயக்குநர் சத்ய சிவாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அறிவு பட போஸ்டர் - படம் - இன்ஸ்டாகிராம்
தனது நீண்டநாள் கனவான நடிப்புப் பயணம் அறிவு திரைப்படத்தின் மூலம் சுபிக்ஷாவுக்குத் தொடங்கியுள்ளது. இதற்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருப்பேன் என சுபிக்ஷா குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்கள், பிக் பாஸ் பிரபலங்கள் பலர் சுபிக்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
Bigg Boss tamil 9 Subiksha to star in Uriyadi Vijaykumar's new film Arivu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண் குழந்தைக்கு தந்தையான பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி!

வீரா தொடரில் முடிவுக்கு வந்த நடிகையின் பாத்திரம்!

சின்ன திரையில் அறிமுகமாகும் பிக் பாஸ் ரியா!
மீண்டும் ஹீரோவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை




