மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எதிர்நீச்சல் பார்வதி நடித்த இணையத் தொடர் நிறைவு! விடியோ வெளியிட்டு உருக்கம்!

எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை பார்வதி, போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

News image

நடிகை பார்வதி - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :9 மார்ச் 2026, 11:23 am

எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை பார்வதி, போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

போலீஸ் போலீஸ் இணையத்தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்தவற்றைக் குறிப்பிடும் வகையில், நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 2025 செப்டம்பர் முதல் போலீஸ் போலீஸ் இணையத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த இந்த இணையத் தொடரில், சுஜிதா தனுஷ், ஷபானா ஷாஜகான், எதிர்நீச்சல் பார்வதி, ஜனனி அசோக் குமார், சத்யா, தீபக், வின்சென்ட் ராய் உள்பட பலர் நடித்தனர்.

Story image

காமெடி, டிராமாவாக ஒளிபரப்பான இந்த இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த இணையத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களை நடிகை பார்வதி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் நடித்த அனைவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தொகுத்து பார்வதி பதிவிட்டுள்ளதாவது:

''போலீஸ் போலீஸ் இணையத் தொடருக்கு நீங்கள் அளித்து வந்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. மிகச்சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய குழுவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம்'' எனக் குறிப்பிட்டு உடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர் குழு, ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Ethiraneechal Actress Parvathy, shared photos and videos from the web series Police Police with her fans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.