சின்ன திரையில் முன்னணி நடிகையான ரேஷ்மா முரளிதரன் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இவர் நடிக்கவுள்ள படத்தில் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவரின் ரசிகர்கள் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சின்ன திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அபி டெய்லர், விஜய் தொலைக்காட்சியின் கிழக்கு வாசல் உள்ளிட்ட தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரேஷ்மா முரளிதரன்.
சமீபத்தில் ஜீ தமிழின் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தனது இயல்பான நடிப்புத் திறனாலும் வசீகரமான தோற்றத்தாலும் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர்.

மாநில அரசின் விருது பெறும் ரேஷ்மா முரளிதரன் - இன்ஸ்டாகிராம்
இவர் நடிக்கும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெறுவதால், சமூக வலைதளங்களில் ரேஷ்மாவுக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர்.

படப்பிடிப்பு பூஜை... - இன்ஸ்டாகிராம்
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செல்லமே செல்லமே தொடரில் ரேஷ்மா நாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிக்கும் தொடர்கள் அடுத்தடுத்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார்.

படப்பிடிப்பு பூஜையில் சக நடிகர்களுடன் ரேஷ்மா - இன்ஸ்டாகிராம்
காளி வெங்கட், ஜேசன் திவாகர், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தில் ரேஷ்மா முரளிதரன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் விஜய் கார்த்திகேயன் இப்படத்தை இயக்குகிறார்.
பெயரிடப்படாத இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரேஷ்மாவின் ரசிகர்கள் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
Reshma Muralidharan makes her cinematic debut, transitioning from TV serials!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

தெலுங்கு பாடலுக்கு நடனமாடிய தமிழ் சீரியல் நடிகை!

500 நாள்களை நிறைவு செய்த மதிய நேர சீரியல்!

சின்ன திரையில் அறிமுகமாகும் பிக் பாஸ் ரியா!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



