ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
1வித் லவ்

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் நடிகர்கள் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வித் லவ்.
வித் லவ் திரைப்படம் நாளை(மார்ச் 6) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
2காந்தி டாக்ஸ்

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடிப்பில் வசனங்களே இல்லாத சைலன்ட் திரைப்படமாக காந்தி டாக்ஸ் உருவானது.
இந்தத் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
3டியர் ரதி

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் சரவண விக்ரம் நடிப்பில் வெளியான டியர் ரதி திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை காணலாம்.
டியர் ரதி படத்தில் சரவண விக்ரமுடன் ஹஸ்லி அமான், ராஜேஷ் பாலச்சந்திரன், சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
4க்ராணி

க்ராணி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
நடிகை வடிவுக்கரசி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
5ஜாக்கி

பிரகபல் இயக்கத்தில் யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள படம் ஜாக்கி.
ஜாக்கி திரைப்படம், நாளை(மார்ச் 6) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. மதுரையில் நடக்கும் கிடா சண்டையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
6விக்ரம் ஆன் டூட்டி

நிகில் மாலியக்கல் நாயகனாக நடித்துள்ள கிரைம் திரில்லர் தெலுங்கு மொழி இணையத் தொடர் விக்ரம் ஆன் டூட்டி.
மேலும் இந்தத் தொடரில் ஆசு ரெட்டி, காயத்ரி சகந்தி, ரகு, ஆர்யா, சமீர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த இணையத் தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
7ஓம் சாந்தி சாந்தி சாந்தி

நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டு வெளியான ஓம் சாந்தி சாந்தி சாந்தி திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகிறது.
ஏ.ஆர்.சஜீவ் இயக்கிய இந்தப் படத்தில் தருண் பாஸ்கர் மற்றும் ஈஷா ரெப்பா பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
8கடந்த வார ஓடிடி (ஹனி)

மதனப்பள்ளியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஹனி திரைப்படத்தை சன் நெக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இந்தப் படத்தில் நவீன் சந்திரா, திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
9தடயம்

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் உருவான தடயம் இணையத் தொடரை ஜீ5 ஓடிடியில் காணலாம்.
தமிழ்நாடு – ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதியில் 1999 ஆம் ஆண்டு நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இணையத் தொடர், கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
10ரோஸ்லின்

சுமேஷ் நந்தகுமார் இயக்கத்தில் விநாயக் சசிகுமார் திரைக்கதையில் உருவாகியுள்ள ரோஸ்லின் இணையத் தொடரை மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார்.
நடிகை மீனா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், ஹாட் ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
11நீலி ஹக்கி

கணேஷ் ஹெக்டே இயக்கத்தில் வெளியான நீலி ஹக்கி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை இப்படம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
12அக்யூஸ்டு

கொங்கனா சென் சர்மா நடிப்பில் அனுபூதி காஷ்யப் இயக்கத்தில் வெளியான படம் அக்யூஸ்டு.
அக்யூஸ்டு திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
Summary
You can see which movies and web series are releasing this week on OTT platforms.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!

ஓடிடியில் தாய் கிழவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!
இந்த வார ஓடிடி படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



