தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இயக்குநர் திருச்செல்வத்தை சந்தித்த மெட்டி ஒலி நடிகை!

மெட்டி ஒலி நடிகை அருணா தேவி இயக்குநர் திருச்செல்வத்தை சந்தித்தது குறித்து...

News image

இயக்குநர் திருச்செல்வத்துடன்... - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :4 மார்ச் 2026, 11:14 am

மெட்டி ஒலி தொடரில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை அருணா தேவி இயக்குநர் திருச்செல்வத்தை சந்தித்துள்ளார்.

திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி தொடரில், திருச்செல்வம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். நடிகை அருணா தேவி, மெட்டி ஒலி தொடரில் நிர்மலா என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

இதன்மூலம், தற்போது திருச்செல்வம் இயக்கிவரும் எதிர்நீச்சல் -2 தொடரில் அருணா தேவி நடிக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் 2002 ஏப்ரல் முதல் 2005 ஜூன் வரை மெட்டி ஒலி தொடர் ஒளிபரப்பானது. சன் தொலைக்காட்சியில் அதிக நாள்கள் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர் என்ற பெருமையை மெட்டி ஒலி அப்போது படைத்திருந்தது.

இயக்குநர் திருமுருகன் இயக்கிய இத்தொடரில் நடித்த போஸ் வெங்கட், சஞ்சீவ் வெங்கட், காயத்ரி, ராஜ்காந்த் உள்ளிட்ட பலரும் சின்ன திரையில் பிரபல நடிகர்களாக உள்ளனர்.

மெட்டிஒலி நிர்மலாவும் சந்தோஷும்

மெட்டிஒலி நிர்மலாவும் சந்தோஷும் - படம் - இன்ஸ்டாகிராம்

இத்தொடரில் நிர்மலாவாக நடித்த அருணா தேவிக்கு கணவராக திருச்செல்வம் (சந்தோஷ்) நடித்திருந்தார். இதுமட்டுமின்றி மெட்டி ஒலி தொடரில் உதவி இயக்குநராகவும் திருச்செல்வம் இருந்தார்.

கோலங்கள் தொடரிலும் திருச்செல்வம் நடித்திருந்தார். எனினும் நடிகர் என்பதைத் தாண்டி இயக்குநராகவே திருச்செல்வம் பலரால் அறியப்படுகிறார்.

இந்நிலையில், இயக்குநர் திருச்செல்வத்தை நடிகை அருணா தேவி நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களில் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Sun tvs Metti Oli actress Nirmala met director Thirumurugan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.