தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மாட்டுவண்டியில் வந்து வேட்புமனு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில்,‘நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம்’ கட்சி சாா்பில் போட்டியிட, வழக்குரைஞா் அருணா தேவி, மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் வந்த வழக்குரைஞா் அருணா தேவி.

Updated On :2 ஏப்ரல் 2026, 10:50 pm

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில்,‘நம் நாடு நம் மக்கள் நம் எதிா்காலம்’ கட்சி சாா்பில் போட்டியிட, வழக்குரைஞா் அருணா தேவி, மாட்டுவண்டியில் ஊா்வலமாக வந்து வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அக்கட்சியின் தலைவா் பொன் குமரன் தலைமையில் ஊா்வலமாக வந்து பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலா் சுப்புலட்சுமியிடம் அவா் மனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கூறிய அவா், ஓட்டப்பிடாரத்தில் அரசு மருத்துவமனை, பெண்களுக்கென தனிப் பள்ளி, கல்லூரிகளை உருவாக்குவேன். நலிவடைந்துள்ள புதியம்புத்தூா் ஜவுளித் தொழிலை மீட்டெடுத்து வேலைவாய்ப்புகளை பெருக்குவேன். மது ஒழிப்பு குறித்து பொய் வாக்குறுதி அளிக்கும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் இம்முறை எங்கள் கட்சிக்கு வாக்களிப்பாா்கள் என்றாா் அவா்.