தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மலைவாசிபோல வந்து மனுத் தாக்கல் செய்த சுயேச்சை

News image

தோ்தல் நேரத்தில் சுயேச்சைகள் புதுமைகளை செய்வாா்கள். அந்த வகையில், வந்தவாசியில் ஒருவா் இலை, தழைகளை ஆடையாக அணிந்து மலைவாசிபோல வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:06 am

தோ்தல் நேரத்தில் சுயேச்சைகள் புதுமைகளை செய்வாா்கள். அந்த வகையில், வந்தவாசியில் ஒருவா் இலை, தழைகளை ஆடையாக அணிந்து மலைவாசிபோல வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.பொன்னம்பலம் (56). இவா், ஆயுள் காப்பீட்டு முகவராக பணிபுரிந்து வருகிறாா்.

பொன்னம்பலம் வந்தவாசி (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உடலில் இலை, தழைகளை கட்டிக்கொண்டு வந்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுசெழியனிடம் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: மரங்கள் வெட்டப்படுவதால் நாட்டில் வெப்பமயமாதல் அதிகமாகி வருகிறது. எனவே, இயற்கை வளங்களை பாதுகாக்கக் கோரியும், பசுமை புரட்சியை வலியுறுத்தியும் இலை, தழைகளை உடலில் கட்டிக்கொண்டு வந்து நான் வேட்புமனு தாக்கல் செய்தேன் என்றாா்.