லஷ்மி பிரியா நாயகியாக நடித்துவரும் மகாநதி தொடர் 800 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனை மகாநதி குழுவினர் போஸ்டர் வெளியிட்டுக் கொண்டாடியுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
தந்தையின்றி நான்கு மகள்களை வளர்க்கும் தாயின் கதையாகத் தொடங்கிய இந்தத் தொடரில் தற்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று, திருமண வாழ்வில் சந்திக்கும் சவால்களை மையமாகக் கொண்டு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் நடிகை லஷ்மி பிரியா நாயகியாகவும், சுவாமிநாதன் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி ருத்ர பிரவீன், ஸ்வேதா குமார், காவியா, சுஜாதா சிவகுமார் உள்ளிட்டோரின் நடிப்பும் முக்கிய பலமாக அமைந்துள்ளது.
குடும்ப உறவுகளில் இக்கால இளைஞர்கள் சந்திக்கும் பிரச்னைகள் சார்ந்து ஒளிபரப்பாவதால் இத்தொடர் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகிவரும் மகாநதி தொடர், தற்போது 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக சிறப்பு போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Summary
Vijay tvs Mahanadhi serial completes 800 episodes Serial actress lakshmi priya
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!

பிறந்தநாளில் வயதை அறிவித்த சிங்கப் பெண்ணே நாயகி!

500 நாள்களை நிறைவு செய்த மதிய நேர சீரியல்!

விரைவில் நிறைவடைகிறது சக்திவேல் - 2 தொடர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



