விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் நிறைவடையவுள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் சக்திவேல். இந்தத் தொடர் கடந்த 2023 டிசம்பர் 4 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
முதல் பாகத்தில் பிரவீன் ஆதித்யா நாயகனாகவும், அஞ்சலி பாஸ்கர் நாயகியாகவும் நடித்திருந்தனர். இவர்களுடன் ரேஷ்மா பிரசாத், மெர்வென் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
ஹிந்தி மொழியில் ஒளிபரப்பான மன் கீ ஆவாஸ் பிரதிக்யா என்ற தொடரைத் தழுவி, இந்த தொடர் தமிழில் எடுக்கப்பட்டு வருகிறது.
தனது உரிமைகளுக்காகப் போராடும் நாயகி, ரெளடியை(நாயகன்) திருமணம் செய்துகொண்டு, நாயகி சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
சக்திவேல் முதல் பாகம் கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்த நிலையில், நாயகன் சிறைக்குச் செல்வதுபோல, காட்சியமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த அக். 21 ஆம் தேதி முதல் சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 7 ஆண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு, ரெளடியாக இருந்த நாயகன் திருந்தி வாழ முயற்சி செய்கிறார். இதிலிருந்து சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிறது.
முதல் பாகத்தில் வேலன் பாத்திரத்தில் பிரவீன் ஆதித்யா நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் விக்ரம் ஸ்ரீ நடித்து வருகிறார். தேனம்மை பாத்திரத்தில் நடித்த விஜே சந்தியாவுக்குப் பதிலாக, சஹானா நடித்து வருகிறார்.
புதிய கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வந்த சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகம், விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
சக்திவேல் தொடரின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் இறுதிக்கட்ட காட்சிகள் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Summary
The second part of the Sakthivel series, which is being aired on Vijay TV, will be completed soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1200 நாள்களைக் கடந்த எதிர்நீச்சல் தொடர்!

சுபம்... 707 நாள்களில் நிறைவடைந்த சக்திவேல் தொடர்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் நாகினி தொடரின் புதிய பாகம்!

விரைவில் நிறைவடைகிறது காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



