மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சம்பளத்தை உயர்த்திய ருக்மணி வசந்த்!

ருக்மணி வசந்த் சம்பளம் குறித்து...

News image

நடிகை ருக்மணி வசந்த்

Updated On :1 மார்ச் 2026, 12:00 pm

நடிகை ருக்மணி வசந்த் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். கன்னட ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் கவனம் பெற்றது.

இதனை தொடர்ந்து நடிகை ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

அதன்பின், மதராஸியில் நடித்து தமிழ் ரசிகர்களின் விருப்பமான நாயகி பட்டியலுக்குள் நுழைந்தார். இறுதியாக, இவர் நடித்த காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் பான் இந்திய ஹிட் ஆனதுடன் ரூ. 850 கோடி வரை வசூலித்தது.

அடுத்ததாக, டாக்ஸிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுபோக, ஹிந்தி சினிமாவில் நடிக்க கதைகளையும் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில், ருக்மணி வசந்த் தன் சம்பளத்தை ரூ. 3 கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில், பாலிவுட் விருது விழாவில் கலந்துகொண்டு வைரலான பின்பே இந்த முடிவை அவர் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Summary

actor Rukmani Vasanth has increased her salary.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.