பாரி இளவழகன் நாயகனாக நடித்துள்ள அன்பே டயானா திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
ஜமா திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் பாரி இளவழகன். இப்படத்தில் பாரி இளவழகனின் நடிப்பு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, பாரி இளவழகன் இயக்கி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “அன்பே டயானா”. மில்லியன் டாலர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா, பரிதாபங்கள் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையில், சென்னை பெரம்பூரில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் பெரம்பூர் கானா எனும் பாடல் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், அன்பே டயானா திரைப்படத்தின் “தொடுவானத்தில்” எனும் 2 ஆவது பாடலை இன்று (ஜூன் 12) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Summary
A new song from the movie *Anbe Diana*, starring Pari Ilavazhagan as the lead, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









