பிரேமலு நாயகன் நஸ்லென் பிறந்த நாளுக்கு வாழ்த்திய சூர்யா 47 படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. ழகரம் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
மலையாள நடிகர் நஸ்லென் தண்ணீர் மாதன் தினங்கள், ஹோம் ஆகிய படங்களில் கவனம் பெற்றார். பிரேமலு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.
கடைசியாக நஸ்லென் நடித்த மோலிவுட் டைம்ஸ் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முன்னதாக வெளியான லோகா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, சூர்யா 47 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஆவேஷம் பட இயக்குநர் ஜீது மாதவன் இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் நஸ்ரியா நாயகியாக நடிக்கிறார்.
நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதால் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது. தற்போது, இப்படத்தைத் தீபாவளி வெளியீடாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நஸ்லென் பிறந்த நாளுக்கு படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறது.
Summary
Naslen in *Suriya 47*! The film crew extends birthday wishes!
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









