ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி 88 வயதில் காலமானார்!

தென்னிந்திய சினிமாவின் மூத்த பின்னணிப் பாடகி ஜமுனா ராணி காலமானது குறித்து...

Jamuna Rani

ஜமுனா ராணி - படம்: எக்ஸ் / மேங்கோ மியூசிக்.

Published On :31 ஜூலை 2026, 2:54 pm IST

பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி தனது 88ஆவது வயதில் வயது முதிர்வினால் பெங்களூரில் காலமானார்.

தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் சுமார் 6,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதை வென்றுள்ளார்.

முதன்முதலாக 1944ல் தெலுங்கில் தாசில்தார் படத்தில் பாடகியாக அறிமுகமான ஜமுனா ராணி தமிழில் கல்யாணி எனும் படத்தில் 1952ல் தனது முதல் பாடலைப் பாடினார்.

பின்னர்,1950- 1990வரை பல்வேறு தமிழ்ப் படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். நாயகன் படத்தில் நீ சிரித்தால் தீபாவளி எனும் பாடலைப் பாடியுள்ளார்.

கடைசியாக தமிழில் 1992ல் அண்ணன் என்னடா தம்பி என்னடா என்ற படத்தில் இரவு நாடகன் எனும் படத்தில் பாடினார். அவரது திரை வாழ்வில் 2012ல் தெலுங்கில் லஷ்மி நடித்த மிதுனம் எனும் படத்தில் எவரு கெலிசாரிப்புடு எனும் பாடலை பாடியிருந்தார்.

தனது 7 வயதிலேயே பாடல் பாடத் தொடங்கிய ஜமுனா ராணி கடைசிவரை திருமணம் செய்யாமலே இறந்துவிட்டார். ஜே.பி. சந்திரபாபு உடன் குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே பாடம் அந்தக் காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Veteran playback singer Jamuna Rani passes away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.