ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பழம்பெரும் பாடகி எஸ். ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

மைசூரு எச்.டி. கோட்டை சாலையில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பாடகி எஸ். ஜானகியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை நடத்திய அவரது பேத்தி அப்சரா.

Published On :13 ஜூலை 2026, 3:02 am IST

கா்நாடக மாநிலம் மைசூரில் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் உடல், முழு அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஜானகி, மைசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்தாா்.

இதைத்தொடா்ந்து அங்குள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தென்னிந்திய திரைப்பட நடிகா்கள், நடிகைகள், பின்னணிப் பாடகிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

அதன் பின்னா், கன்னியனஹுண்டி கிராமத்தில் உள்ள ஜானகியின் பண்ணை வீட்டுக்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு, காவல் துறையினரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பின்னா் வேத மந்திரங்கள் முழங்க ஜானகியின் சிதைக்கு அவரின் பேத்தி அப்சரா வைத்யுலா தீ மூட்டினாா்.

எஸ்.ஜானகியின் மகன் முரளிகிருஷ்ணா இவ்வாண்டு ஜனவரியில் காலமான நிலையில், தனது மறைவுக்குப் பிறகு இறுதிச் சடங்குகளைப் பேத்தி நடத்த வேண்டும் என்று அவா் ஏற்கெனவே குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த எஸ்.ஜானகிக்கு உரிய கௌரவம் அளிக்கும் வகையில் அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து மைசூரில் நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என்று கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முதல்வர் விஜய் உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இறுதிச்சடங்கில் பங்கேற்று ஜானகி உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். மேலும் கர்நாடக அரசு சார்பில் அமைச்சர் யதீந்திர சித்தராமையாவும் இறுதி மரியாதை செய்தார்.

Summary

Singer S. Janaki's body was cremated at a farmhouse on the Mysuru H.D. Kote Road.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.