
காட்சி எதுவாயினும் வாழ்த்தும் கட்சி... தனுஷைச் சந்தித்த பார்த்திபன்!
நடிகர்கள் தனுஷ் - பார்த்திபன் சந்திப்பு குறித்து...

நடிகர்கள் தனுஷ் - பார்த்திபன்
நடிகர் தனுஷ் உடனான சந்திப்பு குறித்து நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், நடிகர் தனுஷை அவரின் இல்லத்தில் சந்தித்துள்ளார். மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரின் நினைவுகளைப் பகிரும் கூடுகைக்கு அழைக்கும் நோக்கில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பதிவிட்ட பார்த்திபன், ”காட்சி எதுவாயினும் வாழ்த்தும் கட்சி நான்! பாரதிராஜா பாக்யராஜ் இருவருக்கும் நடக்கும் நினைவு உற்சவத்திற்கு அழைக்க சென்ற தினம் நண்பர் தனுஷின் பிறந்த நாளும் கூட! நாலும் கை கூட (நடிப்பு, இயக்கம் , தயாரிப்பு இன்னும்…..) அவரை வாழ்த்தினேன்.
“வணக்கம் சொன்னாக் கூட அதையும் வணக்க்கம்னு extra ‘ க் ‘ வைச்சு பேசுறது பார்த்திபன் சாருக்கு பழக்கம் “ என செல்வமணியிடம் என் குறும்பை விரும்பி சொன்னார். என் பார்வை அழகாக அலங்கரிக்கப்பட்ட அவர் பெற்ற விருதுகளின் மீதே!” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






