ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கிராமி விருதைப் புறக்கணிப்பதாக பிடிஎஸ் இசைக்குழு அறிவிப்பு!

கிராமி விருதுகளைப் புறக்கணிப்பதாக பிடிஎஸ் முடிவெடுத்துள்ளது...

பிடிஎஸ் இசைக்குழு 2019 ஆம் ஆண்டு கிராமி விருதில்...

Published On :30 ஜூலை 2026, 4:44 pm IST

உலகப் புகழ்பெற்ற பிடிஎஸ் இசைக்குழு கிராமி விருதுகளைப் புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளனர்.

தென்கொரியாவை மையமாக வைத்து உலகம் முழுவதும் தங்கள் பாடல்களால் அசத்தி வருபவர்கள் பிடிஎஸ் இசைக்குழுவினர். மொழி புரியவில்லை என்றாலும் இந்தியா உள்பட பல நாடுகளில் மிகப்பெரிய செல்வாக்கும் புகழும் கொண்டவர்களாகத் திகழும் பிடிஎஸ் குழுவினர் இந்தாண்டு கிராமி விருதுக்கான பரிந்துரையிலிருந்து தங்கள் குழுவை விலக்கிக்கொண்டனர்.

காரணம், கிராமி விருதுக் குழு இந்தாண்டு முதல் ஆசிய நாடுகளுக்கான சிறப்பு பிரிவை உருவாக்கியுள்ளனர். பிடிஎஸ் இசைக்குழு ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தப் பிரிவில்தான் இடம் பிடிப்பார்கள்.

இந்த நிலையில், இசைக்கு எந்த குறிப்பிட்ட அடையாளங்களும் இல்லை; அதனைக் குறுக்கி மதிப்பிடக் கூடாது என்பதால் இந்த முறை கிராமி விருதைப் புறக்கணிக்கிறோம் என பிடிஎஸ் அறிவித்துள்ளது. உலகின் முன்னணி இசைக்குழு இசைத்துறைக்கென வழங்கப்படும் முதன்மையான விருதைப் புறக்கணித்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

The world-famous music group BTS has decided to boycott the Grammy Awards.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.