ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சைகலாஜிக்கல் த்ரில்லரான ராவ் பகதூர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ராவ் பகதூர் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Rao Bahadur

ராவ் பகதூர் போஸ்டர் - படம்: எக்ஸ்

Published On :29 ஜூலை 2026, 5:34 pm IST

சைகலாஜிக்கல் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள ராவ் பகதூர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சத்யதேவ் பிரதான பாத்திரத்தில் இந்தப் படத்தில், விகாஸ் முப்பாலா, பாலா பரசர் மற்றும் தீபா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குணப்படுத்த முடியாத நோயில் உயிர்வாழும் ராமப்பா ராவ் பகதூர் என்ற மன்னனின் கதையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ராவ் பகதூர் படத்தை வெங்கடேஷ் மஹா எழுதி, இயக்கியுள்ளார். படத்தொகுப்பு பணிகளையும் இவரே மேற்கொண்டார். ஸ்மரன் சாய் இசையமைத்துள்ளார்.

சத்யதேவின் நடிப்பு, இயக்குநரின் பட உருவாக்கம் மற்றும் கதையின் திருப்பங்கள் என ராவ் பகதூர் திரைப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றது.

திரையரங்குகளில் 25 நாள்கள் ஓடிய இந்தப் படம், உலகம் முழுவதும் ரூ. 11.43 கோடி வசூலித்தது.

இந்த நிலையில், ராவ் பகதூர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for the psychological thriller film Rao Bahadur has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.