ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கட்டா குஸ்தி - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கட்டா குஸ்தி - 2 ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

Poster for the movie Katta Kusthi 2.

கட்டா குஸ்தி 2 படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷ்னல்

Published On :29 ஜூலை 2026, 12:28 pm IST

கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியான படம் கட்டா குஸ்தி - 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், காளி வெங்கட், மோக்‌ஷா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். அவர்களின் காட்சிகளும் பெரிதாக ரசிக்கப்பட்டன.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 55 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆண் - பெண் உறவு, திருமண உறவுகளில் இருக்க வேண்டிய நம்பிக்கை, அவரவருக்கான கனவுகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட கருத்துகளுடன் நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் கமர்சியல் அம்சங்களுடன் கூடிய திரைப்படமாகத் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for the movie Gatta Kusthi 2 has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.