ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓடிடியில் கட்டா குஸ்தி - 2 எப்போது?

கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

katta kusthi 2

கட்டா குஸ்தி - 2 போஸ்டர். - படம்: எக்ஸ்

Published On :8 ஜூலை 2026, 6:54 pm IST

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான கட்டா குஸ்தி - 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது.

கட்டா குஸ்தி - 2 திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் செல்ல அய்யாவு ஆண் - பெண் உறவுச் சிக்கலுடன் பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும் என்பதை மையப்படுத்திய குஸ்தியாக கதையாக உருவாக்கியிருந்தார்.

முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் கமர்சியல் அம்சங்களுடன் கூடிய திரைப்படமாகத் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முக்கியமாக, நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் மோக்‌ஷாவின் காட்சிகள் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஐஷ்வர்யா லட்சுமி நாயகியாகவும், முனீஸ்காந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கட்டா குஸ்தி திரைப்படம் 5 நாள் வசூலாக ரூ. 25 கோடி வரை வசூலித்துள்ளது. முதல் பாகத்தின் வசூலைவிட இரண்டாம் பாகம் மிக அதிகமாக வசூலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

Summary

Details regarding the OTT release of the film Gatta Kusthi 2, starring actor Vishnu Vishal, have been revealed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.