ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குறைவான வசூலைச் செய்த ஜன நாயகன் திரைப்படம்!

ஜன நாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து...

cm vijay's jananayagan

ஜன நாயகன் படத்தின் அடியே என் பூந்தேனே பாடலில்... - Youtube

Published On :25 ஜூலை 2026, 6:40 pm IST

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் எதிர்பார்த்த வசூலைச் செய்யாததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவான ஜன நாயகன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 23) உலகெங்கும் 3000-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தாலும் முதல் நாளில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டன. இதனால், இப்படம் நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி முதல் நாள் வசூலை (ரூ. 152 கோடி) முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இரண்டு நாள் வசூலாகவே ஜன நாயகன் உலகளவில் ரூ. 112 கோடியையே வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்தில் இப்படம் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக முதல்வர் விஜய்யின் திரைப்படங்கள் முதல் நாள் வசூலாக ரூ. 100 கோடியைக் கடந்துகொண்டிருந்த நிலையில், ஜன நாயகன் குறைவாகவே வசூலித்திருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

Fans are shocked that Vijay's film Jananayagan did not achieve the expected box-office collections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.