ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் - தெலுங்கிலும் பாடிய சூர்யா!

நடிகர் சூர்யா தமிழ், தெலுங்கில் புதிய பாடலைப் பாடியுள்ளார்....

நடிகர் சூர்யா

Published On :25 ஜூலை 2026, 4:28 pm IST

நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் பாடலைத் தெலுங்கிலும் பாடியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இன்று, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் 2-வது பாடலான 'வெட்டிங் சாங்' பாடல் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் வெங்கட் அட்லுரி, “இரண்டாவது பாடலை சூர்யா சார் பாடினால் நன்றாக இருக்குமென இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சொன்னார். நான் அவரிடம் கேட்டேன். ஆனால், சூர்யா சார் மறுத்துவிட்டார். பின், படப்பிடிப்பில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் சொல்லி சம்மதிக்க வைத்தோம். தமிழில் பாடிவிடுவார். ஆனால், இம்முறை தெலுங்கிலும் அவரே பாடியுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலம் கழித்து நடிகர் சூர்யா ஒரே பாடலின் தமிழ், தெலுங்கு வடிவங்களைப் பாடியிருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Actor Suriya has also sung a song from the movie Viswanath & Sons in Telugu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.