ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விறுவிறுப்பான டிக்கெட் முன்பதிவில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்பட முன்பதிவு குறித்து...

vishwanath and sons

சூர்யா, மமிதா பைஜூ - Instagram

Published On :12 ஆகஸ்ட் 2026, 5:37 pm IST

நடிகர் சூர்யா நாயகனாக நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்படைந்துள்ளன.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்கள், டிரைலர் காட்சிகள் ஆகியவை இளம் தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்திருப்பதால் நன்றாக இருந்தால் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் வெங்கட் அட்லுரியும், இதற்கு முன் நீங்கள் பார்க்காத கிளைமேக்ஸாக இருக்கும் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்திற்கான ஆன்லை டிக்கெட் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சில திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளை நோக்கி விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும், ஆந்திரம் மற்றும் கேரளத்திலும் முன்பதிவிற்காகத் திறக்கப்பட்ட திரைகளில் டிக்கெட்கள் நன்றாக விற்றுக்கொண்டிருக்கின்றன.

வெளியீட்டுக்கு இன்னும் ஒரு நாள் உள்ளது. இதனால், மேலும் பல திரைகளிலும் அதிக டிக்கெட்கள் விற்பனையாகலாம் என்பதால் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Ticket bookings for the film Viswanath and Sons, starring actor Suriya, have picked up momentum.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.