ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உங்களின் ஹலமிதி ஹபிபோ... ஜன நாயகன் புகைப்படங்களைப் பகிர்ந்த பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜன நாயகன் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளது குறித்து...

Vijay and Pooja Hegde in the movie Jana Nayagan.

ஜன நாயகன் படத்தில் விஜய் - பூஜா ஹெக்டே. - படம்: இன்ஸ்டா / பூஜா ஹெக்டே.

Published On :23 ஜூலை 2026, 4:09 pm IST

நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜன நாயகன் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, “உங்களின் ஹலமிதி ஹபிபோ” எனக் கூறியுள்ளார்.

நடிகராக விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை எச். வினோத் இயக்க, கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ஜன நாயகன் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்து, “ரிலீஸ் தேதி இங்கே. கடைசியாக ஒருமுறை, கடைசியான ஆட்டம். உங்களின் ஹலமிதி ஹபிபோ... கல்யாணி மற்றும் வெற்றி” எனக் கூறியுள்ளார்.

ஜனநாயகன் படத்தில் விஜய் வெற்றி என்ற கதாபாத்திரத்திலும் பூஜா ஹெக்டே கல்யாணி என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

முன்னதாக, பீஸ்ட் படத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஹலமிதி ஹபிபோ என்ற பாடலும் நடனமாடியிருப்பார்கள். இந்தப் பாடலும் நடனமும் மிகவும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

"Your 'Halamithi Habibo'..." – Pooja Hegde on Vijay's last film!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.